மார்ச் 31 வரை பேருந்துகள் ஓடாது, ஓட்டல்கள் மூடப்படும்: அரசு அதிரடி அறிவிப்பு

மார்ச் 31 வரை பேருந்துகள் ஓடாது, ஓட்டல்கள் மூடப்படும்: அரசு அதிரடி அறிவிப்பு

உலகம் முழுவதும் மிக வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவில் உள்ள கிட்டத்தட்ட அனைத்து மாநிலங்களிலும் கொஞ்சம் கொஞ்சமாக பரவி வருகிறது இந்த நிலையில் இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 300ஐ தாண்டிவிட்டதாக திடுக்கிடும் தகவல் ஒன்று வெளிவந்துள்ளது

தமிழகத்தில் மட்டும் கொரோனா வைரஸால் தாக்கப்பட்டவர்கள் 6 பேர் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் கொரோனா வைரசை கட்டுப்படுத்த பீகார் அரசு அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. இதன்படி மார்ச் 31ம் தேதி வரை பீகார் மாநிலத்தில் உள்ள அனைத்து பேருந்துகளும் ஓடாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது

அதுமட்டுமல்ல பீகார் மாநிலத்தில் உள்ள அனைத்து உணவகங்களும் அடைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது இந்த அறிவிப்பால் பீகார் மாநில பொது மக்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்

Leave a Reply