விரைவில் பிக்பாஸ் ப்ரோமோ வீடியோ: புகைப்படங்கள் வைரல்!

உலகநாயகன் கமல்ஹாசன் அவர்கள் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஐந்தாவது சீசன் விரைவில் ஒளிபரப்பாக உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது

இந்த நிகழ்ச்சியின் புரமோ வீடியோ சமீபத்தில் படமாக்கப்பட்டது. இது குறித்த புகைப்படங்கள் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

வரும் செப்டம்பர் அல்லது அக்டோபர் மாதம் பிக் பாஸ் சீசன் தொடங்கும் என்றும் இந்த நிகழ்ச்சியின் போட்டியாளர்கள் கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டு விட்டதாகவும் கூறப்படுகிறது
குக் வித் கோமாளி, மிஸ்டர் அண்ட் மிஸஸ் திரை ஆகியவற்றில் கலந்து கொண்டவர்கள் மற்றும் சின்னத்திரை பெரிய திரை உலகைச் சேர்ந்தவர்கள் இந்த நிகழ்ச்சியின் போட்டியாளர்களாக கலந்து கொள்வார்கள் என்பது குறிப்பிடத்தக்கது