இனி 24 மணி நேரமும் பிக்பாஸ்: பிரத்யேக ஓடிடி ஆரம்பம்

பிக் பாஸ் நிகழ்ச்சியில் நேற்று முடிவடைந்த நிலையில் ராஜு டைட்டில் பட்டமும், பிரியங்கா இரண்டாவது இடமும் பெற்றார்கள்

இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியை அடுத்து பிக் பாஸ் அல்டிமேட் என்ற புதிய நிகழ்ச்சி ஆரம்பமாக உள்ளதாகவும், ஜனவரி இறுதி இறுதி வாரத்தில் இந்த நிகழ்ச்சி தொடங்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிகழ்ச்சி 24 மணி நேரமும் ஓடும் என்றும், இதற்கென பிரத்தியேக ஓடிடி தளமாக பிக்பாஸ் அல்டிமேட் என்ற ஓடிடி தளம் ஒன்று உருவாக்கப்பட்டு உள்ளது. இந்த பிரத்யேக ஓடிடி தளத்தை நேற்று சிவகார்த்திகேயன் தொடங்கி வைத்தார்.