பிக்பாஸ் ஓடிடியில் வனிதா, அனிதா: களைகட்டும் என எதிர்பார்ப்பு!

பிக்பாஸ் நிகழ்ச்சி ஐந்தாவது சீசன் நிறைவு பெற உள்ள நிலையில் விரைவில் பிக் பாஸ் ஓடிடி என்ற புதிய நிகழ்ச்சி தமிழில் தொடங்கப்பட உள்ளதாக செய்தி வெளியானது.

இந்த நிகழ்ச்சியில் இதுவரை ஐந்து சீசன்களில் கலந்துகொண்ட போட்டியாளர்களில் 12 அல்லது 13 போட்டியாளர்கள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறாது.

இந்த நிலையில் பிக்பாஸ் ஓடிடி நிகழ்ச்சியில் வனிதா, அனிதா, ஜூலி ஆகிய மூவரும் இப்போதைக்கு உறுதி செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் இந்த நிகழ்ச்சி 70 நாட்கள் வரை நடத்த திட்டமிடப்பட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது.