மருத்துவமனையில் இருந்து நேராக பிக்பாஸ் செட்டுக்கு செல்லும் கமல்ஹாசன்!

பிக்பாஸ் தமிழ் சீசன் 5 நிகழ்ச்சியை உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய நிலையில் திடீரென அவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டதால் கடந்த வாரம் மட்டும் நடிகை ரம்யாகிருஷ்ணன் பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார் என்பது தெரிந்ததே

இந்த நிலையில் கமல்ஹாசன் கொரோனாவில் இருந்து குணமாகிய நிலையில் டிசம்பர் 3ஆம் தேதி வரை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று மருத்துவமனை நிர்வாகம் அறிவுறுத்தியிருந்தது

ஆனால் டிசம்பர் 4ஆம் தேதி முதல் அவர் தனது வழக்கமான பணிகளை செய்யலாம் என்றும் மருத்துவமனை நிர்வாகம் கூறியிருந்தது.

இந்த நிலையில் நாளை மருத்துவமனையில் நேராக பிக்பாஸ் நிகழ்ச்சி நடத்தப்படும் செட்டுக்கு செல்லவுள்ளதாக கூறப்படுகிறது.