shadow

தளபதி 67 படத்தில் பிக்பாஸ் சீசன் 6 போட்டியாளர்: பரபரப்பு தகவல்

தளபதி விஜய் நடிப்பில் உருவாக இருக்கும் தளபதி 67 படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் இந்த படத்தில் பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டியாளர்களில் ஒருவரான ஜனனி நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

இது குறித்து அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே இந்த படத்தில் அர்ஜுன், சஞ்சய் தத், மன்சூர் அலிகான், மிஷ்கின், கௌதம் மேனன் திரிஷா உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.