போபாலில் பாஜக பொது கூட்டம் நடந்தது. இதில் கட்சியின் முன்னணி தலைவர்கள் பலரும் கலந்து கொண்டனர். மேடையில் அத்வானியின் காலை தொட்டு வணங்கினார் மோடி. ஆனால் அத்வானி இதனை கண்டு கொள்ளவில்லை. மோடியும் அதை பொருட்படுத்தவில்லை.
மேலும் விழாவில் பேசிய மோடி காங்கிரஸ் ஆட்சியை கடுமையாக தாக்கினார். முற்றிலும் அரசு செயல் இழந்து விட்டது. இதனால் மக்கள் பாஜக பக்கம் திரும்பியுள்ளனர். அரசின் திட்டங்கள் சரியாக செயல்படுத்தப்படவில்லை. ஏன் திட்டங்கள் கூட சரியாக வகுக்கப்படவில்லை என்று மோடி குற்றம்சாட்டினார். அத்வானி பேசும் போது மேடையில் மோடியை புகழ்நதார். இந்தியாவை காப்பாற்றி நல்வழி பாதையில் பயணிக்கவைக்க மோடியால் மட்டுமே முடியும் என்றார். இந்த விழாவில் 7 லட்சம் பேர் கலந்து கொண்டனர். கின்னஸ்  சாதனையில் இடம் பிடிக்கவும் இது விண்ணப்பிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply