shadow

ஜெயலலிதாவுக்கு பாரதரத்னா, நோபல் பரிசு. அதிமுக பொதுக்குழுவில் தீர்மானங்கள்

இன்று சென்னையில் கூடிய அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு இந்தியாவின் உயரிய விருதான பாரத ரத்னா விருதையும், அமைதிக்கான நோபல் பரிசை வழங்கக் கோரியும் தீர்மானங்கள் இயற்றப்பட்டன.

அவைத்தலைவர் மதுசூதனன் தலைமையில் நடைபெற்று வரும் அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் முதல்வர் பன்னீர்செல்வம், பொன்னையன் பண்ருட்டி ராமச்சந்திரன் , தம்பிதுரை, எடப்பாடி பழனிச்சாமி, அன்வர் ராஜா, சரோஜா உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இந்த பொதுக்குழுவில் சில முக்கிய தீர்மானங்கள் இயற்றப்பட்டன. அவை பின்வருமாறு:

1. சசிகலா தலைமையின் கீழ் விசுவாசத்துடன் பணியாற்ற உறுதி

2. பொதுச்செயலாளர் நியமனத்திற்கு பொதுக்குழுவில் ஒப்புதல்

3. மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு பாரத ரத்னா விருது வழங்க கோரி தீர்மானம்

4. ஜெயலலிதா மறைவின் போது சட்டம்-ஒழுங்கை காக்க உதவிய மத்திய அரசுக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம்

5. ஜெயலலிதாவுக்கு அமைதிக்கான நோபல் பரிசு, மகசசே விருதினை வழங்க கோரியும் தீர்மானம்

6. ஜெயலலிதாவின் பிறந்த நாளை தேசிய விவசாயிகள் தினமாகக் கொண்டாட வலியுறுத்தும் தீர்மானம்

7. நாடாளுமன்றத்தில் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் வெண்கலச் சிலையை நிறுவ மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்து தீர்மானம்

மேற்கண்ட தீர்மானங்கள் உள்பட மொத்தம் 14 தீர்மானங்கள் இயற்றப்பட்டன.

மேலும் அதிமுக பொதுச்செயலாளராக ஜனவரி 2ஆம் தேதி சசிகலா பொறுப்பேற்பார் என்று அதிமுக வட்டாரங்கள் கூறுகின்றன.

Leave a Reply