shadow

‘ஜாஸ்’ படத்தின் 40வது ஆண்டுவிழாவை வித்தியாசமாக கொண்டாடிய ரசிகர்கள்

shadow

ஜூராசிக் பார்க் படத்தை இயக்கிய ஸ்டீபன் ஸ்பீல்பெர்க்கை தெரியாதவர்கள் இருக்க முடியாது. உலகம் முழுவதையும் தனது வித்தியாசமான திரைக்கதை மற்றும் பிரமாண்ட காட்சி அமைப்புகளால் கட்டிப்போட்ட ஸ்டீபன் ஸ்பீல்பெரிக் இயக்கத்தில் கடந்த 40 ஆண்டுகளுக்கு முன்னர் வெளிவந்த திரைப்படம் ‘ஜாஸ்’

இந்த படத்தின் 40ஆண்டு விழாவை முன்னிட்டு இந்த திரைப்படம் புதுப்பொலிவுடன் மிகவும் வித்தியாசமான லொகேஷனில் திரையிடப்பட்டது. டெக்ஸாஸ் மாகாணத்தில் உள்ள ஒரு ஏரிக்கரையில் பிரமாண்ட ஸ்கிரீனில் ஒளிபரப்பட்ட இந்த படத்தை ஏரியில் மிதந்தவாறே படகிலும், மிதக்கும் பலூனிலும் உட்கார்ந்து ரசிகர்கள் இந்த படத்தை பார்த்தனர். முழுக்க முழுக்க தண்ணீரில் படமாக்கப்பட்ட இந்த படத்தில் தண்ணீரில் இருந்து கொண்டே பார்ப்பது வித்தியாசமான அனுபவமாக இருந்ததாக படம் பார்த்தவர்கள் கூறியுள்ளனர்.

ராய் ஷீதர், ராபர்ட் ஷா, ரிச்சர்ட் டிரேஃபஸ் முர்ரே ஹாமில்டன் உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு மிக அற்புதமாக ஜான் வில்லியம்ஸ் என்பவர் இசையமைத்திருந்தார். சுமார் 9 மில்லியன் அமெரிக்க டாலரில் தயாரிக்கப்பட்ட இந்த படம் உலகம் முழுவதும் சுமார் 470 மில்லியன் அமெரிக்க டாலர் வசூல் செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply