shadow

b3f64c64-7f44-4eb9-adf7-701411b2c8c0_S_secvpf

பலராலும் அலட்சியப்படுத்தப்படுகிற பகுதி பாதங்கள்.

கால்களுக்கு மசாஜ் செய்து, நல்லதொரு பெடிக்யூர் செய்து பாருங்களேன். வெடிப்புகளோ, சுருக்கங்களோ, தடிப்புகளோ இல்லாத பாதங்கள் பார்வைக்கு மட்டும் அழகில்லை… உங்கள் ஆரோக்கியத்தின் பிரதிபலிப்பும்கூட!

1. பல் தேய்ப்பது, குளிப்பது மாதிரி கால்களுக்கான பராமரிப்பும் தினசரி பின்பற்றப்பட வேண்டும். டீ டிகாஷன் கலந்த வெதுவெதுப்பான தண்ணீரில் கால்களை 15 நிமிடங்களுக்கு ஊற வைக்கவும். பிளாக் டீயில் உள்ள டானிக் ஆசிட், மிகச்சிறந்த ஆன்டிபாக்டீரியலாக வேலை செய்து, பாதங்களைப் பாதுகாக்கும். கால்கள் நன்கு ஊறியதும், பியூமிஸ் ஸ்டோன் கொண்டு தேய்த்தால் இறந்த செல்கள் நீங்கி, பாத சருமம் மென்மையாகும். பிறகு மாயிச்சரைசர் அடங்கிய ஸ்க்ரப் செய்து (பழங்கள் கொண்டு தயாரிக்கப்பட்டதாக இருந்தால் சிறப்பு)

கால்களின் எல்லாப் பக்கங்களிலும் மென்மையாகத் தேய்க்கவும். பிறகு மறுபடி கால்களை நன்கு கழுவி விட்டு, கோகோ பட்டர் அடங்கிய ஃபுட் கிரீம் தடவி லேசாக மசாஜ் செய்து, அப்படியே விட்டு விடவும்.

2. பாதங்களில் வெடிப்பு லேசாக ஆரம்பிக்கும் போதே அவற்றைச் சரி செய்ய வேண்டும். அப்படியே விட்டால், நாளடைவில் வெடிப்புகள் அதிகமாகி, பாதங்கள் முழுக்கப் பரவும். பாத வெடிப்பு இருப்பவர்கள், முதலில் சொன்னது மாதிரி கால்களை ஊற வைத்து, ஸ்க்ரப் செய்து, மசாஜ் செய்த பிறகு, சாலிசிலிக் ஆசிட் கலந்த கிரீம்களைப் பாதங்களில் தடவிக் கொண்டு, மேலே காட்டன் சாக்ஸ் அணிந்து கொண்டு தூங்கலாம். பகல் நேரங்களில் அடிக்கடி கால்களைக் கழுவி, லேசான ஈரம் இருக்கும்போதே மாயிச்சரைசர் தடவிக கொள்வதன் மூலம் வெடிப்புகள் மறையும்.

3. சிலருக்குப் பாதங்கள் எப்போதும் வறண்டே இருக்கும். அவர்கள் ஆன்ட்டிஃபங்கல் லோஷன் உபயோகிக்கலாம்.

4. சன் ஸ்கிரீன் என்பது வெறும் முகம், கழுத்து, கைகளுக்கு மட்டுமில்லை… கால்களுக்கும் அவசியம் என்பதை மறந்து விடாதீர்கள்.

இதனால் உடலின் மற்றப் பகுதிகள் ஒரு நிறத்திலும், பாதம் மட்டும் வேறொரு நிறத்திலும் இருப்பது தவிர்க்கப்படும்.

Leave a Reply