சென்னை, மும்பை போன்ற நகரங்களில் தற்போது வேலைக்கு செல்லும் பெண்களின் எண்ணிக்கை அதிகம் உள்ளது. அதே சமயம், அவர்கள் தங்கள் அழகை சரியாக பராமரிக்க முடியாத நிலையிலும் உள்ளார்கள். ஏனெனில் அந்த அளவில் வேலைப்பளுவானது அனைத்து துறையிலும் அதிகரித்துவிட்டது. அதனால் வேலையை முடித்துவிட்டு, வீட்டிற்கு வந்தால் உடல் சோர்வால் சாப்பிட்டு தூங்க மட்டும் தான் நேரம் உள்ளது. சிலருக்கு அந்த நேரம் கூட கிடைக்காது. ஆகவே அத்தகைய பெண்களுக்கு ஒருசில எளிமையான அழகு குறிப்புள்.

இந்த அழகு குறிப்புக்களை சரியாக பின்பற்றி வந்தால், இயற்கையான அழகில் ஜொலிக்கலாம். அதுமட்டுமின்றி, இந்த அழகு குறிப்புகள் அனைத்தும் மிகவும் எளிமையானவை. சரி, இப்போது அந்த அழகு குறிப்புக்களைப் பார்ப்போமா!!!

பொலிவான கண்கள்
கண்கள் நன்கு புத்துணர்ச்சியுடனும், கருவளையமின்றியும் இருக்க, தினமும் காலையில் எழுந்ததும், உருளைக்கிழங்கை வட்டமாக நறுக்கி, கண்களின் மேல் வைத்து, 10 நிமிடம் ஊற வைத்து, பின் குளிக்க செல்ல வேண்டும்.

முகத்தில் வளரும் முடி
சில பெண்களுக்கு முகத்தில் உள்ள முடியானது நன்கு தெரியும். இதனை மறைக்க வேண்டுமெனில், ஃபௌண்டேஷன் போடலாம். இல்லையெனில், வாரத்திற்கு ஒரு முறை எலுமிச்சையை முகத்தில் தேய்த்து வந்தால், முடி தெரியாது.

சரும சுருக்கம்
பெரும்பாலான பெண்கள் சந்திக்கும் பிரச்சனைகளில் ஒன்று தான் சரும சுருக்கம். இந்த சரும சுருக்கம் ஏற்பட்டால், அது முதுமைத் தோற்றத்தை வெளிப்படுத்தும். இதனை தற்காலிகமாக மறைக்க கன்சீலர் பயன்படுத்தலாம். ஆனால் இயற்கையாக மறைக்க வேண்டுமெனில், தயிரை முகத்திற்கு தடவி நன்கு உலர விட்டு, வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும். இந்த முறையை தொடர்ச்சியாக வாராவாரம் ஒரு முறை செய்து வந்தால், நல்ல பலன் தெரியும்.

கூந்தல் பராமரிப்பு
கூந்தல் உதிர்தலைத் தடுத்து, அதன் அடர்த்தியை அதிகரிக்க வேண்டுமெனில், பீர் அல்லது பீர் ஷாம்பு கொண்டு கூந்தலை அலச வேண்டும். வேண்டுமெனில், ஒயின், வோட்கா போன்றவற்றையும் பயன்படுத்தலாம்.

ஹேர் ரிமூவல்
உடலின் தேவையற்ற  முடியை ஷேவ் செய்யும் போது சோப்பு போட்டு ஷேவ் செய்யாமல், கண்டிஷனர் உபயோகித்து ஷேவ் செய்தால், ஷேவிங் செய்த பின்னர் சருமம் மென்மையாக இருக்கும்.

முழங்கை
முழங்கை வறட்சியுடன் அசிங்கமாக இருந்தால், அதனை போக்க தினமும் ஆலிவ் ஆயில் கொண்டு மசாஜ் செய்தால், வறட்சி நீங்குவதோடு, முழங்கையும் மென்மையாக இருக்கும்.

அழகான உதடுகள்
உதடுகளின் நிறம் அழகாக, அதே சமயம் இயற்கையான தோற்றத்தில் காணப்பட வேண்டுமெனில், ப்ரௌன், செர்ரி அல்லது நியூட் கலர் லிப்ஸ்டிக் போட வேண்டும். இல்லாவிட்டால், தினமும் உதட்டை தேங்காய் அல்லது ஆலிவ் ஆயில் கொண்டு மசாஜ் செய்தால், உதடுகள் லிப்ஸ்டிக் போடாமலேயே அழகாக இருக்கும்.

Leave a Reply