shadow

தளபதி விஜய் நடித்த ’பீஸ்ட்’ திரைப்படம் வரும் ஏப்ரல் 14ம் தேதி தமிழ்ப் புத்தாண்டு தினத்தில் வெளியாகவுள்ள நிலையில் படத்தின் அப்டேட் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் என சன் பிக்சர்ஸ் நிறுவனம் சற்றுமுன்அறிவித்து உள்ளது.

’பீஸ்ட்’ படத்தின் படப்பிடிப்பு முடிந்து தற்போது விஜய்யின் டப்பிங் பணிகள் உள்பட அனைத்து தொழில்நுட்ப பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன

இந்த நிலையில் ’பீஸ்ட்’ படத்தின் ரிலீஸ் தேதி ஏப்ரல் 14ஆம் தேதியா? அல்லது அதில் மாற்றம் இருக்குமா? என்பது குறித்த தகவல் இன்றைய அப்டேட்டில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இன்று வெளியாகும் பீஸ்ட் படத்தின் அப்டேட் விஜய் ரசிகர்களுக்கு பெரும் உற்சாகத்தை அளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.