shadow

தளபதி விஜய் நடித்து முடித்துள்ள ’பீஸ்ட் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் இந்த படத்தின் சிங்கிள் பாடல் வரும் பொங்கல் தினத்தில் ரிலீஸாகும் என எதிர்பார்க்கப்படுகிறது

அனிருத் இசையில் உருவான ’பீஸ்ட் படத்தின் சிங்கிள் பாடல் பொங்கல் தினத்தில் வெளிவர அதிக வாய்ப்பிருப்பதாக ’பீஸ்ட் படக்குழுவினர்களை வட்டாரங்களிலிருந்து தகவல்கள் வெளியாகியுள்ளதால் விஜய் ரசிகர்கள் படத்தின் மிகவும் உற்சாகமாகியுள்ளனர்.

விஜய் ஜோடியாக பூஜா ஹெக்டேவும் வில்லனாக செல்வராகவனும் நடித்துள்ள இந்த படத்தில் யோகிபாபு, ஷைன் டாம் சாக்கோ, விடிவி கணேஷ், அபர்ணா தாஸ் உள்பட பலர் நடித்துள்ளனர்.

அனிருத் இசையமைத்துள்ள இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.