ஐந்து நாட்கள் தொடர் விடுமுறை? அதிர்ச்சியில் பொதுமக்கள்!

ஐந்து நாட்கள் தொடர் விடுமுறை? அதிர்ச்சியில் பொதுமக்கள்!

மார்ச் 11 முதல் 13 வரை வங்கிகள் வேலை நிறுத்தம் என்றும் மார்ச் 14 இரண்டாவது சனி மற்றும் மார்ச் 15 ஞாயிறு என்பதால் ஐந்து நாட்கள் வங்கிகளுக்கு தொடர் விடுமுறை இருக்க வாய்ப்பு இருப்பதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது

மார்ச் 11 12 13 ஆகிய மூன்று நாட்கள் வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம் செய்ய முடிவு செய்திருப்பதால் அந்த மூன்று நாட்களும் வங்கிகள் செயல்படாது என்று கூறப்படுகிறது. புதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வங்கி ஊழியர்கள் சம்மேளனம் இந்த வேலை நிறுத்தத்தை அறிவித்துள்ளது.

மத்திய அரசு அதற்கு முன் பேச்சுவார்த்தை நடத்தி தங்களுடைய கோரிக்கைகளை ஏற்றுக் கொண்டால் வேலை நிறுத்தம் வாபஸ் பெறப்பட வேண்டும் என்றும், இல்லையெனில் திட்டமிட்டபடி வேலை நிறுத்தம் 3 நாட்கள் நடைபெறும் என்றும் வங்கி ஊழியர் சங்க நிர்வாகிகள் அறிவித்துள்ளனர்

மார்ச் 11 12 13 ஆகிய மூன்று நாட்கள் தொடர்ச்சியாக வேலை நிறுத்தம் என்பதாலும் அதனையடுத்து சனி, ஞாயிறு விடுமுறை என்பதாலும் வங்கி வாடிக்கையாளர்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள் என்பது மட்டுமின்றி ஏடிஎம்களில் பணம் நிரப்பும் பணி இருக்காது என்பதால் பொதுமக்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.

Leave a Reply