ஆஸ்திரேலியாவை அடித்து நொறுக்கிய வங்கதேசம்

ஆஸ்திரேலியாவை அடித்து நொறுக்கிய வங்கதேசம்

கிரிக்கெட் உலகின் ஜாம்பவான் அணி என்று கூறப்படும் ஆஸ்திரேலியா, கத்துக்குட்டி அணி வங்கதேசத்திடம் தோல்வி அடைந்துள்ளது. அதிலும் இந்த தோல்வி டெஸ்ட் போட்டியில் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆஸ்திரேலிய அணி வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் செய்து டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது. கடந்த 27ஆம் தேதி தொடங்கிய முதல் டெஸ்ட் போட்டியில் வங்கதேச அணி முதல் இன்னிங்ஸில் 260 ரன்களும், 2வது இன்னிங்ஸில் 221 ரன்களும் எடுத்தது.

ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 217 ரன்களே எடுத்திருந்த நிலையில் இந்த போட்டியில் வெற்றி பெற அந்த அணிக்கு 264 ரன்கள் தேவைப்பட்டது. ஆனால் ஆஸ்திரேலியா 244 ரன்களில் அவுட் ஆகிவிட்டதால் வங்கதேச அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது

Leave a Reply