இந்தியாவை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்ற வங்கதேச அணி: அதிர்ச்சியில் கிரிக்கெட் ரசிகர்கள்

இந்தியாவை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்ற வங்கதேச அணி: அதிர்ச்சியில் கிரிக்கெட் ரசிகர்கள்

19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் நேற்று நடைபெற்ற இறுதிப் போட்டியில் இந்திய அணியை வீழ்த்தி வங்கதேசம் அணி சாம்பியன் பட்டம் பெற்றதால் இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தனர்

நேற்றைய போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பந்து வீச முடிவு செய்ததை அடுத்து இந்திய அணி களம் இறங்கியது. இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரரான ஜெய்ஸ்வால் தவிர மற்ற பேட்ஸ்மேன்கள் சோபிக்கவில்லை. இதனால் 47 2 ஓவர்களில் இந்திய அணி 177 ரன்களுக்கு ஆட்டமிழந்தது

இதனையடுத்து 178 ரன்கள் என்ற இலக்கை நோக்கி வங்கதேச அணி விளையாடியபோது 163 ரன்கள் எடுத்திருந்த நிலையில் மழை பெய்தது. இதனால் 46 ஓவர்களில் வங்கதேச அணி 170 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கு மாற்றி அமைக்கப்பட்டது

ஆனால் 42.1 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 170 ரன்கள் எடுத்த வங்கதேச அணி 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று உலக கோப்பையை கைப்பற்றியது. முதன்முதலாக வங்கதேச அணி 19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலக கோப்பையை வென்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply