முதல்-அமைச்சர் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கு பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. ஜெயலலிதாவிடம் பறிமுதல் செய்யப்பட்ட பொருட்கள் பெங்களூருக்கு கொண்டு வரப் படவேண்டும் என மனுதார் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.

இது தொடர்பான விசாரணையின் போது ஜெயலலிதா வீட்டில் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட 1066 பொருட்களையும் கோர்ட்டில் ஒப்படைக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார். பொருட்களை டிச. 21க்குள் ஒப்படைக்க கோர்ட் உத்தரவிட்டுள்ளது.

அவரது வீட்டில் பறிமுதல் செய்யப்பட்ட பொருட்கள் சென்னை ரிசர்வ் வங்கியில் உள்ளது. அதனை பாதுகாப்பாக பெங்களூருக்கு கொண்டுவர கோர்ட் உத்தரவிட்டுள்ளது

Leave a Reply