மும்பையை 111 ரன்களில் சுருட்டிய பெங்களூர்!

நேற்று நடைபெற்ற மும்பை மற்றும் பெங்களூரு அணிகளுக்கிடையிலான போட்டியில் மும்பை அணி 54 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது

ஏற்கனவே இரண்டு தோல்விகள் பெற்று வந்த மும்பை அணி மூன்றாவது ஆக தொடர் தோல்வி அடைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

நேற்றைய போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு அணி 6 விக்கெட் இழப்புக்கு 165 ரன்கள் எடுத்தது மேக்ஸ்வெல் அபாரமாக விளையாடி 52 ரன்களும் கேப்டன் விராட் கோலி 50 ரன்களும் எடுத்தனர்

இதனை அடுத்து மும்பை அணி 166 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடிய நிலையில் 111 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது என்பது குறிப்பிடத்தக்கது. ஹர்ஷல் பட்டேல் 4 விக்கெட்டுகளையும் சாஹல் 3 விக்கெட்டுகளையும் மேக்ஸ்வெல் 2 விக்கெட்டுகளும் சிராஜ் ஒரு விக்கெட்டுகளையும் வீழ்த்தினர் என்பது குறிப்பிடத்தக்கது

மும்பை பெற்ற தொடர் தோல்வி காரணமாக அந்த அணி தற்போது புள்ளி பட்டியலில் 7வது இடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.