shadow

டெல்லியை வீழ்த்தியது பெங்களூர்: அடுத்த சுற்றுக்கு செல்லுமா?

ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் நேற்றைய 45வது போட்டியில் டெல்லி மற்றும் பெங்களூர் அணிகள் மோதியது. இந்த போட்டியில் விராத்கோஹ்லி மற்றும் டிவில்லியர்ஸ் ஆகியோர்களின் அபார ஆட்டத்தால் பெங்களூர் அணி 5 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியால் அந்த அணி தற்போது 8 புள்ளிகளுடன் 7வது இடத்தில் உள்ளதால் அடுத்த சுற்றுக்கு தகுதி பெறும் வாய்ப்பு இருப்பதாகவே கூறப்படுகிறது.

நேற்றைய போட்டியில் டாஸ் வென்று முதலில் பந்துவீச பெங்களூர் அணி முடிவு செய்ததால் டெல்லி அணி முதலில் பேட்டிங் செய்தது. அந்த அணி 20 ஓவர்களில் 4 விக்கெட்டுக்களை இழந்து 181 ரன்கள் எடுத்தது. ஆர்.ஆர்.பேண்ட் 61 ரன்களும், அபிஷேக் சர்மா 46 ரன்களும், எஸ்.எஸ்.ஐயர் 32 ரன்களும் எடுத்தனர்.

இதனையடுத்து 182 என்ற இலக்கை நோக்கி விளையாடிய பெங்களூரு அணி 19 ஓவர்களில் 5 விக்கெட்டுக்களை இழந்து 187 ரன்கள் எடுத்தது. கேப்டன் விராத் கோஹ்லி 70 ரன்களும், டிவில்லியர்ஸ் ஆட்டமிழக்காமல் 72 ரன்களும் எடுத்தனர். டிவில்லியர்ஸ் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

Leave a Reply