பெங்களூரு எலக்ட்ரானிக் சிட்டியில் விபத்து: சென்னையை சேர்ந்த இருவர் பலி!

பெங்களூரு எலக்ட்ரானிக் சிட்டி மேம்பாலத்தில் நேற்றிரவு அதிவேகமாக வந்த கார் மோதி, தூக்கி வீசப்பட்டு உயிரிழந்த இருவரும் சென்னையைச் சேர்ந்தவர்கள்

விபத்தில் உயிரிழந்த பிரீதம், கிருத்திகா ஆகிய இருவரும் பெங்களூரில் உள்ள ஐ.டி. நிறுவனத்தில் பணியாற்றி வந்தனர்

அதிவேகமாக காரை ஓட்டி விபத்தை ஏற்படுத்திய கார் ஓட்டுனர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்; அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது