தெலுங்கானா மசோதா நாடாளுமன்றத்தின் மக்களவை ,மாநிலங்களவை ஆகிய இரண்டு அவைகளிலும் நிறைவேறிவிட்டதால் தனி மாநிலம் உதயமாவது  உறுதியாகியுள்ளது. இதனிடையே ஆந்திராவை இரண்டாக பிரிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று சீமாந்திர பகுதிகளில் பந்த் நடைபெற்று வருகிறது.

இதனால் விசாகப்பட்டனம், விஜயவாடா உள்ளிட்ட முக்கிய நகரங்களில் பஸ் போக்குவரத்து உள்பட அனைத்து வாகனங்களும் ஓடாததால் சாலைகள் வெறிச்சோடி உள்ளது. மேலும், கடைகள், வணிக நிறுவனங்கள், ஏ.டி.எம். மையங்கள், பெட்ரோல் பங்குகளும் மூடப்பட்டிருப்பதோடு, ஆங்காங்கே, தெலங்கானா எதிர்ப்பாளர்கள் ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் சீமாந்திர பகுதிகளில் பெரும் பதட்டம் நிலவுகிறது.

பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மீண்டும் எப்போது திறக்கப்படும் என்ற முறையான அறிவிப்பு இல்லை. இம்மாத இறுதியில் தெலுங்கானா மசோதாவிற்கு ஜனாதிபதி ஒப்புதல் அளிப்பார் என்று எதிர்பார்க்கப்படுவதால், சீமாந்திர பகுதிகளில் பெரும் பதட்டம் ஏற்பட்டுள்ளது.

Leave a Reply