shadow

chops

தேவையான பொருட்கள்:

வாழைக்காய் – 1
மஞ்சள் தூள் – 1 சிட்டிகை
மிளகாய் தூள் – 1/2 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன்
கடுகு – 1 டீஸ்பூன்
பெருங்காயத் தூள் – 1 சிட்டிகை
கறிவேப்பிலை – சிறிது

அரைப்பதற்கு :

தேங்காய் – 2 டேபிள் ஸ்பூன்
இஞ்சி – 1/2 இன்ச்
பூண்டு – 5 பல்
மிளகு – 1 டீஸ்பூன்

செய்முறை :

* அரைப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை மிக்ஸியில் போட்டு, சிறிது தண்ணீர் ஊற்றி பேஸ்ட் போல் அரைத்துக் கொள்ள வேண்டும்.

* முதலில் வாழைக்காயின் தோலை நீக்கிவிட்டு, அதனை நீள நீளமாக வெட்டிக் கொள்ளவும்.

* ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைத்து, அத்துடன் வாழைக்காயைப் போட்டு பாதியாக வேக வைத்து கொள்ளவும்.

* ஒரு பாத்திரத்தில் வாழைக்காயை போட்டு அத்துடன் உப்பு, மிளகாய் தூள், மஞ்சள் தூள் சேர்த்து பிரட்டி 15 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.

* ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, பெருங்காயத் தூள், கறிவேப்பிலை போட்டு தாளித்த, பின் பிரட்டி வைத்துள்ள வாழைக்காயைப் போட்டு மிதமான தீயில் 3 நிமிடம் பிரட்டி, அரைத்து வைத்துள்ள பேஸ்ட், உப்பு தூவி நன்கு பிரட்டி விட வேண்டும்.

* அடுத்து அதில் சிறிது தண்ணீர் தெளித்து, மூடி வைத்து 2 நிமிடம் வேக வைத்து இறக்கினால், சுவையான வாழைக்காய் பெப்பர் சாப்ஸ் ரெடி.

Leave a Reply