shadow

ஒபாமா நாயின் மகன், பான் கீ மூன் ஒரு முட்டாள். பிலிப்பைன்ஸ் அதிபர் பாய்ச்சல்

ban-ki-moonசமீபத்தில் லாவோஸ் நாட்டில் வியன்டியான் நகரில் 14-வது ஆசியன் மற்றும் 11-வது கிழக்கு ஆசிய மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் அமெரிக்க அதிபர் ஒபாமாவும், பிலிப்பைன்ஸ் அதிபர் ரோடிரிகோ டுட்டர்டே அவர்களும் பேச்சுவார்த்தை நடத்துவார்கள் என்றும் இந்த பேச்சுவார்த்தையில் பிலிப்பைன்ஸ் போதைப்பொருள் கடத்தல்காரர்கள் குறித்து ஒபாமா கேள்வி எழுப்புவார் என்றும் கூறப்பட்டது. ஆனால் இந்த சந்திப்பு எதிர்பாராத விதமாக நடைபெறவில்லை.

இந்நிலையில் ஒபாமாவை தரக்குறைவாக திட்டி பிலிப்பைன்ஸ் அதிபர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். அவர் அளித்துள்ள பேட்டியில் கூறியதாவது: “ஒபாமா என்ன பெரிய கொம்பனா?, நான் ஒன்றும் அமெரிக்காவுக்கு தலையாட்டி பொம்மை இல்லை. நான் இறையாண்மை மிக்க ஒரு நாட்டின் அதிபர். என்நாட்டு மக்களை தவிர வேறு யாருக்கும் நான் பதில் அளிக்க வேண்டிய அவசியம் இல்லை. பெட்டை நாயின் மகனே.., (Son of a bitch) உன்னை (ஒபாமா) சபித்து விடுவேன்’ என்று சரமாரியாக பொறிந்துத் தள்ளினார்.

ஒபாமாவை மட்டுமின்றி ஐ.நா பொதுசெயலாளர் பான் கீ மூன் அவர்களையும் அவர் ஒரு முட்டாள் என்று ஒரு பேட்டியில் கூறியுள்ளார். ஆனால் சமீபத்தில் அவர் ஒபாமா மற்றும் பான் கீ மூனை அதுபோன்று திட்டவில்லை என்று மறுப்பு தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply