shadow

கடந்த சில நாட்களாக மூடப்பட்டிருந்த பாலாறு பாலம் நாளை முதல் திறக்கப்பட உள்ளது.

செங்கல்பட்டு மாவட்டத்தில் சென்னை மற்றும் திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் பழைய பாலாறு பாலம் சமீபத்தில் மூடப்பட்டது என்பது தெரிந்ததே

புதுப்பித்தல் பணி காரணமாக கடந்த 7ஆம் தேதி முதல் மூடப்பட்டிருந்த நிலையில் நாளை நள்ளிரவு முதல் மீண்டும் போக்குவரத்துக்கு திறக்கப்பட உள்ளது.

நாளை நள்ளிரவு முதல் சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பழைய பாலம் வழியாக வாகனங்கள் செல்லலாம்.