சேலம் சிறையில் அடைக்கப்பட்டுள்ள போலீஸ் பக்ருதீனை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. சேலத்தில் பாரதீய ஜனதா கட்சியின் மாநில பொது செயலாளர் ஆடிட்டர் ரமேஷ் கொலை செய்யப்பட்டார்.இந்த கொலை தொடர்பாக போலீஸ் பக்ருதீன், பிலால் மாலிக், பன்னா இஸ்மாயில் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். போலீஸ் பக்ருதீன் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டு இருந்த போது சிறை அதிகாரிகளுடன் தகராறு செய்தார். இதுபற்றி அஸ்தம்பட்டி போலீசார் விசாரித்து போலீஸ் பக்ருதீன், சும்சுதீன், ஷாஜகான் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு விசாரணை சேலம் முதன்மை குற்றவியல் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.இதில் போலீஸ் பக்ருதீன் ஆஜராகாததால் அவரை பிடித்து கோர்ட்டில் ஆஜர்படுத்த நீதிபதி புவனேஸ்வரி பிடிவாரண்டு பிறப்பித்தார். இவருக்கு ஜாமீன் மனுவில் கையெழுத்திட்ட அவரது தாயார் சையத்மீரா, பெரியம்மா மகபூப்பீவி ஆகியோருக்கும் பிடிவாரண்டு பிறப்பிக்கப்பட்டது. இவர்களும் ஆஜராகவில்லை.இந்த வழக்கு விசாரணை நாளை வருகிறது. இதில் போலீஸ் பக்ருதீன் ஆஜர்படுத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அவரை மீண்டும் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க உயர் போலீசார் முடிவு செய்துள்ளனர். இதனால் போலீஸ்பக்ருதீன் நாளை அழைத்து வரமாட்டார் என்றும், சேலம் சி.பி.சி.ஐ.டி. போலீசார் போலீஸ் பக்ருதீனை விசாரிக்க மனு செய்து அவரை போலீஸ் காவலில் சேலம் எடுத்து வந்து விசாரிக்கும் போது கோர்ட்டு பிடிவாரண்டு வழக்கிலும் ஆஜர்படுத்திடலாம் என்றும் போலீஸ் அதிகாரிகள் முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.
போலீஸ் பக்ருதீனை சேலம் அழைத்து வந்து விசாரிக்க சேலம் கோர்ட்டில் அரசு வக்கீல் மூலம் மனு செய்யவும் சி.பி. சி.ஐ,டி. போலீஸ் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

Leave a Reply