ரூ.100 கோடி சாதனையில் விஜய்யின் ‘பைரவா’

ரூ.100 கோடி சாதனையில் விஜய்யின் ‘பைரவா’

இளையதளபதி விஜய் நடித்த ‘பைரவா’ திரைப்படம் ரூ.100 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை செய்துள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் அதே நேரத்தில் விஜய்யின் முந்தைய படமான ‘தெறி’ வெற்றியை ஒப்பிடும்போது இந்த படத்தின் லாபம் குறைவுதான் என்றும் விநியோகிஸ்தர்கள் மத்தியில் கூறப்படுகிறது.

கடந்த ஜனவரி மாதம் 12ஆம் தேதி வெளியான விஜய்யின் ‘பைரவா’ திரைப்படம் வெளிவந்து இன்றுடன் 25 நாட்கள் ஆகிறது. இந்த 25 நாட்களில் இந்த படம் ரூ.108 கோடி வசூல் செய்துள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் ரூ.62.5 கோடி தமிழகத்தில் மட்டும் வசூல் செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்தின் உலகளாவிய வியாபாரம் ரூ.72 கோடிக்கு விற்பனையாகியுள்ள நிலையில் இந்த படத்தின் லாபம் ‘தெறியுடன் ஒப்பிடும்போது மிகவும் குறைவு என்பது குறிப்பிடத்தக்கது. ‘பைரவா’ படத்திற்கு கிடைத்த கலவையான விமர்சனம் மற்றும் ஜல்லிக்கட்டு போராட்டம் ஆகியவையே வசூல் குறைய காரணம் என்பதாக கூறப்படுகிறாது.

Leave a Reply