உத்தரகாண்ட் பேரழிவின்போது உயிரை பணயம் வைத்து மீட்பு பணிகளில் ஈடுபட்ட பாதுகாப்பு படை வீரர்களுக்கு முதல்வர் பகுகுணா பாராட்டு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது: கடந்த ஜூன் மாதம் ஏற்பட்ட பேரழிவு  போன்று வேறு எங்கும் நடந்தது இல்லை. மீட்பு பணிகளில் பாதுகாப்பு படை வீரர்கள் செய்தவற்றை  வார்த்தைகளால் சொல்லமுடியாது.  மழை, வெள்ளத்தை பொருட்படுத்தாமல், உயிரை பணயமாக வைத்து  ஒரு லட்சத்து 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்களை மீட்டனர். அப்போது அங்கு வானிலையும் மிக மோசமாக இருந்தது என்றார்.

Leave a Reply