shadow

ஒரே வாரத்தில் ரஜினி, அஜித், விஜய் சாதனையை முறியடித்த ‘பாகுபலி 2’

கோலிவுட்டில் அதிக ஓப்பனிங் வசூல் பெறும் படங்களாக இதுவரை ரஜினி, அஜித், விஜய் படங்கள் மட்டுமே இருந்து வந்தன. இவர்களுடைய படங்களின் ஓப்பனிங் வசூலை கமல்ஹாசன் உள்பட கோலிவுட் நடிகர்களாகவே முடியவில்லை. இந்த நிலையில் தெலுங்கு இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமெளலி இயக்கத்தில் தமிழில் அதிகம் பிரபலம் இல்லாத ஹீரோவான பிரபாஸ் நடிப்பில் உருவான ‘பாகுபலி 2’ படத்தின் ஓப்பனிங் வசூல் சாதனை ஆச்சரியப்படும் வகையில் உள்ளது.

இன்றுடன் ஒருவாரம் முடிவடைய உள்ள நிலையில் ‘பாகுபலி 2’ திரைப்படம் இதுவரை ரூ.50 கோடி தமிழகத்தில் மட்டும் வசூல் செய்துள்ளது. இந்த வசூல் ரஜினியின் ‘கபாலி’, அஜித்தின் ‘வேதாளம்’, விஜய்யின் தெறி வசூல் சாதனையை விட அதிகம் ஆகும்

கூடிய விரைவில் இந்த படங்களின் மொத்த வசூலையும், இதுவரை தமிழில் அதிக வசூல் என்ற பெருமையை வைத்துள்ள ‘எந்திரன்’ பட வசூல் சாதனையையும் ‘பாகுபலி 2’ முறியடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply