shadow

‘பாகுபலி 2’ ஆடியோ ரிலீஸ் தேதி அறிவிப்பு

சமீபத்தில் வெளிவந்த ‘பாகுபலி 2’ திரைப்படத்தின் டிரைலர் 24 மணி நேரத்தில் 5 கோடி பேர் பார்த்து சாதனை செய்தது. இந்தியாவிலேயே 24 மணி நேரத்தில் அதிக நபர்களால் பார்க்கப்பட்ட டிரைலர் என்ற சாதனையை இந்த படம் ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் இந்த படத்தின் ஆடியோ ரிலீஸ் வரும் ஏப்ரல் 9ஆம் தேதி சென்னையில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விழா வெகு பிரமாண்டமாக நடத்தவும், இந்த விழாவிற்கு திரையுலக விஐபிக்கள் அனைவரையும் அழைக்கவும் இயக்குனர் ராஜமெளலி டீம் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

எம்.எம்.கீரவானி இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். இவருடைய இசையில் ‘பாகுபலி’ படத்தில் இடம்பெற்றிருந்த 8 பாடல்களும் சூப்பர் ஹிட் ஆன நிலையில் இந்த இரண்டாம் பாகமும் அதற்கு இணையாக வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply