16முன்னாள் அதிமுக எம்.எல்.ஏவும், ஜெயலலிதாவின் நெருங்கிய தோழியுமான பதர் சயீத், இன்று ஆம் ஆத்மி கட்சியில் சேர்ந்துள்ளார்.

ஜெயலலிதாவின் பள்ளித்தோழியும், முன்னாள் திருவல்லிக்கேணி எம்.எல்.ஏவும் ஆன பதர் சயீத்  இன்று ஆம் ஆத்மி கட்சியில் இணைந்ததாக அக்கட்சியின் மாநில செய்தித் தொடர்பாளர் எம்.லெனின் தெரிவித்துள்ளார்.

மேலும், வரும் நாடாளுமன்ற தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி சார்பில் பதர் சயீத் சென்னையில் ஏதாவது ஒரு தொகுதியில் போட்டியிட வாய்ப்பு உள்ளது என்றும் லெனின் மேலும் தெரிவித்தார்.

1946 ஆம் ஆண்டு பிறந்த பதர் சயீத், 1982ஆம் ஆண்டு வழக்கறிஞராக பட்டம் பெற்றார். கடந்த 2006ஆம் ஆண்டு முதல் 2011ஆம் ஆண்டு வரை திருவல்லிக்கேணி தொகுதியின் எம்.எல்.ஏவாக பதவியில் இருந்தார்.

Leave a Reply