நியூசிலாந்துக்கு எதிராக நடந்த முதல் இரண்டு ஒருநாள் போட்டிகளில் இந்திய அணி தோல்வியடைந்ததால் தரவரிசையில் முதலிடத்தை இழந்தது. 117 புள்ளிகள் எடுத்த நிலையில் இந்தியா இரண்டாவது இடத்திலும் 118 புள்ளிகள் எடுத்த ஆஸ்திரேலிய அணி முதல் இடத்தையும் கைப்பற்றியிருந்தது.

இந்நிலையில் இங்கிலாந்துக்கு எதிராக நேற்று நடந்த நான்காவது ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய அணி படுதோல்வி அடைந்ததால் மீண்டும் புள்ளிகள் பட்டியலில் மாற்றம் ஏற்பட்டது. தோல்வி அடைந்த ஆஸ்திரேலியா 2 புள்ளிகள் இழந்து தற்போது 116 புள்ளிகளே வைத்திருப்பதால் மீண்டும் இந்தியா முதலிடத்தை கைப்பற்றியுள்ளது.

ஆனால் இந்த முதலிடம் நீடிக்க வேண்டும் எனில் இன்று நடைபெற்று வரும் மூன்றாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி கட்டாய வெற்றி பெறவேண்டும். இந்திய அணி இன்றைய போட்டியில் தோல்வியடைந்தால் மீண்டும் ஆஸ்திரேலிய அணி முதலிடம் வகிக்கும்.

Leave a Reply