அதிர்ச்சி புகைப்படம்

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் ஏழை எளிய மக்கள் உணவுக்கு திண்டாடி வருகின்றனர். இந்த நிலையில் அரசு தரும் இலவச உணவை வாங்குவதற்காக மும்பையில் ஏழை எளிய மக்கள் முந்திய நாள் இரவே தட்டுக்களை வரிசையில் போட்டு வைக்கின்றனர்.

இந்த நிலையில் இந்த தட்டு வரிசையில் ஒரு பெண் தனது குழந்தையை உட்கார வைத்த கொடுமையான சம்பவம் நடந்துள்ளது. இதுகுறித்த புகைப்படம் வைரலானதை அடுத்து அந்த பெண்ணுக்கு கண்டனங்கள் குவிந்து வருகிறது.

பசி கொடியது என்றாலும் குழந்தையை வரிசையில் உட்கார வைத்தது அதைவிட கொடிது என்று நெட்டிசன்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

Leave a Reply