shadow

Ajith-at-Venkatprabhu-Daughter-Birthday_4

 

வரும் மே மாதம் 1ஆம் தேதி அஜீத்தின் பிறந்தநாள் வருகிறது. அஜீத்தின் பிறந்த நாளில் இரண்டு முக்கிய திரைப்படங்கள் வெளிவர இருக்கின்றன. இரண்டு படங்களின் இயக்குனர்களும் அஜீத்தை வைத்து முக்கிய திரைப்படங்களை இயக்கியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

அஜீத்தை வைத்து வாலி படம் இயக்கிய எஸ்.ஜே.சூர்யா தற்போது ‘இசை’ என்னும் படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்து தற்போத் பிஜிஎம் வேலைகள் நடந்து வருகின்றன. மேலும் அஜித்தை வைத்து கிரீடம் படத்தை இயக்கிய இயக்குனர் விஜய், தற்போது  “சைவம்” என்ற படத்தை எடுத்து வருகிறார். இந்த படத்தில் நாசரின் மகன் பாட்ஷா அறிமுகம் ஆகிறார். பாட்ஷாவின் தந்தை மற்றும் தாத்தா என்ற இரண்டு கேரக்டர்களில் நாசர் நடித்துள்ளார். தெய்வத்திருமகள் படத்தி நடித்த குழந்தை நட்சத்திரம் சாரா, இந்த படத்தில் முக்கிய வேடம் ஒன்றில் நடித்துள்ளார்.

நாசர் மகன் அறிமுகம் ஆகும் முதல் படமே அஜீத்தின் பிறந்த நாளில் ரிலீஸ் ஆவதால் மிகவும் குஷியாக அவர் இருக்கின்றாராம். ஏனெனில் அவர் சிறு வயதில் இருந்தே ‘தல அஜீத்தின் ரசிகர் என்பதுதான் அவருடைய சந்தோஷத்திற்கு காரணம்.

Leave a Reply