shadow

அனிமேஷனில் உருவாகும் பாகுபலி. எஸ்.எஸ்.ராஜமெளலி தகவல்

bahubaliஇந்தியாவின் பிரமாண்ட இயக்குனர்களில் ஒருவராகிய எஸ்.எஸ்.ராஜமெளலி இயக்கிய ‘பாகுபலி’ திரைப்படம் தென்னிந்திய திரையுலகை உலகமே வியந்து பார்க்கும் அளவுக்கு சாதனை செய்தது. இந்த படம் உலகம் முழுவதும் மாபெரும் வெற்றி பெற்ற நிலையில் தற்போது இந்த படத்தின் இரண்டாம் பாகத்தின் கிளைமாக்ஸ் காட்சிகளின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் இந்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக் ரிலீஸ் தேதியும், படம் ரிலீஸ் தேதியும் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ‘பாகுபலி 2’ திரைபப்டம் வரும் 2017ஆம் ஆண்டு ஏப்ரல் 28ஆம் தேதி வெளிவரும் என்றும் இந்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக் இம்மாதம் 22ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என்றும் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் ‘பாகுபலி திரைப்படம் அனிமேஷனிலும் உருவாகி வருவதாகவும் விரைவில் இந்த அனிமேஷன் படத்டின் டிரைலர் வெளியாகவுள்ளதாகவும் ராஜமெளலி தெரிவித்துள்ளார்.

Leave a Reply