பி.எட் மற்றும் எம்.எட் துணைத்தேர்வு முடிவுகள் இன்று வெளியாக உள்ளன. கடந்த டிசம்பர் மாதம் நடந்த இந்த தேர்வை ஆயிரக்கணகான மாணவ மாணவிகள் எழுதியுள்ளனர்.

பி.எட்., எம்.எட்.துணைத் தேர்வு முடிவுகள் www.tnteu.in என்ற இணையதளத்திலும் வெளியிடப்படும். தேர்வு எழுதியவர்கள் இந்த இணையதளத்திற்கு சென்று தங்களது தேர்வு எண்ணை குறிப்பிட்டு அவர்களுடைய தேர்வு முடிவை தெரிந்து கொள்ளலாம்.

இந்த தேர்வில் தவறியவர்கள் வரும் ஜூன் மாதம் நடக்க உள்ள அடுத்த தேர்வில் கலந்து கொள்ளலாம் என்றும், வரும் பிப்ரவரி 12ஆம் தேதிக்குள் மறுதேர்வுக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்றும் தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் இன்று வெளியிட்ட ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

Leave a Reply