15கருணாநிதியின் மகனும், முன்னாள் திமுக அமைச்சருமான மு.க.அழகிரி இன்று காலை டெல்லியில் திடீரென பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்து பேசியதால் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

பிரதமரை நேரில் சந்தித்து பேசியது குறித்து செய்தியாளர்களிடம் விளக்கமளித்த மு.க.அழகிரி இதுநாள் வரை அமைச்சராக பணிபுரிய வாய்ப்பு தந்த காங்கிரஸ் கூட்டணிக்கும் பிரதமருக்கும்  நன்றி தெரிவித்தேன்  என்றும், மேலும் மதுரை விமான நிலையத்துக்கு பசும்பொன் முத்துராமலிங்க தேவர் பெயரை சூட்ட வலியுறுத்தியதாகவும் அவர் கூறினார். காங்கிரஸ் அணியில் இருந்து திமுக விலகியது தமக்கு வருத்தமளிப்பதாக பிரதமர் கூறியதாகவும் அடுத்தகட்ட முடிவு பற்றி ஆதரவாளர்களை சந்தித்துவிட்டு 2 மாதங்களில் முடிவு எடுக்கப்படும் என்றும் கூறினார்.

தேர்தல் நேரத்தில் பிரதமரை திடீரென அழகிரி சந்தித்து இருப்பதால் அவர் காங்கிரஸ் கட்சியில் சேரக்கூடும் என டெல்லி மற்றும் தமிழக வட்டாரங்களில் செய்தி கசிந்து வருகிறது.

Leave a Reply