shadow

ஆஸ்திரேலியா: இளம்பெண்ணின் படுக்கையறையில் புகுந்த 16அடி மலைப்பாம்பு.  

 pythanஆஸ்திரேலியாவில் உள்ள குயின்ஸ்லாந்து பகுதியை சேர்ந்த இளம்பெண்ணின் படுக்கை அறையில் 16 அடி நீள பாம்பு ஒன்று புகுந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அந்த அறையில் நன்றாக தூங்கிக்கொண்டிருந்த இளம்பெண் திடீரென சத்தம் கேட்டு விழித்தபோது ஒரு பெரிய மலைப்பாம்பு தனது படுக்கை அறையில் இருந்ததை பார்த்து அலறியடித்து வெளியே ஓடியுள்ளார். அவரது அலறல் சத்தத்தை கேட்ட பக்கத்தில் வீட்டார்கள் உடனடியாக பாம்பு பிடிக்கும் நபருக்கு தகவல் கொடுத்து வரவழைத்தனர்.

தேவேகுபீர் என்பவர் அங்கு விரைந்து வந்து பாம்பை லாவகமாக பிடித்து சென்றார். அந்த பாம்பின் எடை 40 கிலோ இருந்ததாகவும் பல ஆண்டுகளாகவே இந்த பாம்பு அந்த வீட்டின் பயன்படுத்தாத ஒரு அறையில் பதுங்கி இருந்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

கடந்த 2012ஆம் ஆண்டு முதல் அந்த இளம்பெண் இந்த வீட்டில் தங்கி வருவதாகவும் ஆனால் இப்பொழுதுதான் இந்த வீட்டில் மிகப்பெரிய பாம்பு நுழைந்ததை கண்டதாகவும் இதன் காரணமாக அவர் விரைவில் வேறு வீட்டிற்கு மாற உள்ளதாகவும் கூறப்படுகிறது.

Australian woman wakes to 16 feet  python surprise

pythan 1

Leave a Reply