shadow

2 வது டெஸ்ட் போட்டி. ஆஸ்திரேலியா 237/6

இந்திய சுற்றுப்பயணம் செய்து வரும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி முதல் டெஸ்ட் போட்டியில் அபார வெற்றி பின்னர் தற்போது பெங்களூரில் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் விளையாடி வருகிறது.

இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து 189 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதனையடுத்து முதல் இன்னிங்ஸை தொடங்கிய ஆஸ்திரேலிய அணி முதல் நாள் ஆட்ட முடிவில் 40 ரன்களுக்கு விக்கெட் எதுவும் இழக்காமல் இருந்தது.

இந்நிலையில் நேற்று தனது முதல் இன்னிங்ஸை தொடர்ந்து ஆடிய ஆஸ்திரேலிய அணி ஆட்ட நேர முடிவில் 6 விக்கெட்டுக்கள் இழப்பிற்கு 236 ரன்கள் எடுத்துள்ளது.

இந்தியாவை விட முதல் இன்னிங்ஸில் 48 ரன்கள் அதிக எடுத்துள்ள ஆஸ்திரேலிய அணியினர்களின் இன்றைய ஆட்டத்தை பொறுத்தே இந்த போட்டியின் முடிவு தெரியவரும்

Leave a Reply