கொரோனா பிரச்சனை, ஊழியர்கள் பற்றாக்குறை: ரோபோக்களை வேலைக்கு வைக்கும் ஓட்டல் நிறுவனங்கள்!

கொரோனா வைரஸ் பிரச்சினை மற்றும் வேலைக்கு ஆள் கிடைப்பதில் பற்றாக்குறை ஆகியவை காரணமாக ஆஸ்திரேலியாவில் உள்ள ஓட்டல் நிறுவனங்கள் ரோபோக்களை வேலைக்கு வைக்க முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது

மனிதர்களை வேலைக்கு வைத்தால் கொரோனா வைரஸ் உள்ளிட்ட பிரச்சனைகள் அதிகமாகிறது

அதுமட்டுமின்றி வேலைக்கு ஆள் கிடைப்பது பெரும் பிரச்சினையாக உள்ளது இதனை அடுத்து ஆஸ்திரேலியாவில் உள்ள முன்னணி ஓட்டல் நிறுவனங்கள் தற்போது ரோபோக்களை உணவு பரிமாறும் வேலைக்கு உள்பட பல்வேறு வேலைகளுக்கு பயன்படுத்துகின்றன என்பது குறிப்பிடத்தக்கது

இதே நிலைமை ஆஸ்திரேலியா மட்டுமின்றி பல நாடுகளிலும் தொடரும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது