ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் திடீர் மரணம்: என்ன ஆச்சு?

ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் திடீர் மரணம்: என்ன ஆச்சு?

ஆஸ்திரேலிய முன்னாள் கிரிக்கெட் வீரர் ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் கார் விபத்தில் மரணம் அடைந்ததாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது
ஆஸ்திரேலிய அணி இரண்டு முறை உலகக் கோப்பை வாங்குவதற்கு முக்கிய காரணமாக இருந்தவர் ஆல்ரவுண்டர் ஆண்ட்ரூ சைமண்ட்ஸ்

மிகச் சிறந்த பேட்ஸ்மேன் மற்றும் பந்து வீச்சாளராக இருந்த அவர் பல சாதனைகளை செய்துள்ளார்

இந்த நிலையில் நேற்று ஆஸ்திரேலியாவில் காரில் சென்று கொண்டிருந்த போது அவரது கார் விபத்துக்குள்ளாகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்

இது குறித்து ஆஸ்திரேலிய போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் மறைவு கிரிக்கெட் வீரர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது