இந்திய மகளிர் அணிக்கு என்ன ஆச்சு? ஆஸ்திரேலியாவிடம் படுதோல்வி!

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா மகளிர் கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான டி20 கிரிக்கெட் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது

இதுவரை நடைபெற்ற 4 டி-20 போட்டிகளில் இந்திய அணி ஒரே ஒரு போட்டியில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது.

இந்த நிலையில் நேற்று நடைபெற்ற 5வது டி20 போட்டியில் ஆஸ்திரேலிய அணி 54 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய மகளிர் கிரிக்கெட் அணி 4 விக்கெட் இழப்பிற்கு 196 ரன்கள் அடித்த நிலையில் 197 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடிய இந்திய மகளிர் அணி 142 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வி அடைந்தது

இதனால் ஆஸ்திரேலிய அணி 4-1 என்ற கணக்கில் இந்த தொடரை வென்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது