shadow

அஸ்வின், யாதவ் பந்துவீச்சில் சுருண்டது ஆஸ்திரேலியா. முதல் இன்னிங்ஸில் 256/9

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து நான்கு டெஸ்ட் போட்டிகளில் விளையாடவுள்ளது. முதல் டெஸ்ட்போட்டி நேற்று புனே நகரில் நடந்தது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பேட்டிங் செய்தது

தொடக்க ஆட்டக்காரர்களான ரென்ஷா மற்றும் வார்னர் சிறப்பான தொடக்கத்தை கொடுத்தபோதிலும் அதன் பின்னர் விளையாடிய ஆஸ்திரேலிய வீரர்கள் உமேஷ் யாதவ், அஸ்வின், ஜடேஜா பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 256 ரன்களுக்கு 9 விக்கெட்டுக்களை இழந்தது. ஸ்டார்க் 57 ரன்களுடனும், ஹசில்வுட் 1 ரன் எடுத்தும் ஆட்டமிழக்காமல் உள்ளனர்.

இந்திய தரப்பில் உமேஷ் யாதவ் 4 விக்கெட்டுக்களையும் அஸ்வின் மற்றும் ஜடேஜா தலா 2 விக்கெட்டுக்களையும், ஜெயந்த் யாதவ் ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.

Leave a Reply