shadow

பேருந்து நிறுத்தம் வந்தவுடன் ஆடியோ.. சென்னையில் சோதனை முயற்சி!

சென்னையில் அடுத்தடுத்த பேருந்து நிறுத்தங்களில் பெயர்களை ஒலிபரப்பும் திட்டம் அமல்படுத்தப்பட உள்ளதாக போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.

சென்னை மாநகர பேருந்துகளில் பேருந்து நிறுத்தங்களில் பெயர்களை ஒலிபரப்பும் திட்டம் இன்று அமல்படுத்த உள்ளதாகவும் பயணிகள் அடுத்த பேருந்து நிறுத்தங்களில் பெயரை ஆடியோ மூலம் இனி கேட்கலாம் என்றும் போக்குவரத்து துறை அறிவித்துள்ளது

பேருந்து நிறுத்தங்கள் அடைவதற்கு 300 மீட்டர் தூரத்திலேயே பேருந்து நிறுத்தத்தின் பெயர் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் ஒலிபரப்பப்படும் என்பது குறிப்பிடத்தக்கது