பார்வையாளர்களுக்கு அனுமதி உண்டு: ஐபிஎல் நிர்வாகம் அறிவிப்பு

ஐபிஎல் தொடர் வரும் மார்ச் மாதம் நடைபெற இருக்கும் நிலையில் இந்த தொடரில் பார்வையாளர்களுக்கு அனுமதி உண்டு என ஐபிஎல் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

2022ஆம் ஆண்டின் ஐபிஎல் தொடர் மார்ச் 26ஆம் தேதி தொடங்கி மே 29 வரை நடைபெற உள்ள நிலையில் போட்டிகள் அனைத்தும் மகாராஷ்டிராவில் உள்ள 4 மைதானங்களில் மட்டுமேநடத்தப்படும் என ஐபிஎல் நிர்வாகம் கூறியுள்ளது

இந்த நிலையில் மைதானங்களில் 40 சதவீத பார்வையாளர்கள் போட்டிகளைப் பார்க்க அனுமதிக்கப்படும் என்றும் ஐபிஎல் நிர்வாகம் தெரிவித்துள்ளது