சென்னையில் கடந்த சில நாட்களாக நடந்து வரும் ஏடிபி சேலஞ்சர் டென்னிஸ் போட்டி தற்போது விறுவிறுப்பான இறுதி கட்டத்திற்கு வந்துள்ளது. இந்தியாவின் சோம்தேவ் வர்மன், யூகி பாம்ப்ரி ஆகியோர் அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளனர்.

நேற்று ஸ்பெயின் நாட்டு வீரருடன் சோம்தேவ் தேவ்வர்மன், காலிறுதியில் மோத இருந்தார்.ஆனால் ஸ்பெயின் வீரர் ஜோர்ட் சேம்பர்ஸ் திடீரென உடல்நலக் கோளாறு காரணமாக போட்டியில் இருந்து விலகுவதாக அறிவித்தார். அதையடுத்து சோம்தேவ் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

மற்றொரு காலிறுதி போட்டியில் இந்திய வீரர் யூகி பாம்ப்ரி, பிரான்ஸ் வீரர் லூகாஸ் பெளலியை 3-6, 6-2,6-2 என்ற கணக்கில் வீழ்த்தி அரையிறுதிக்கு தகுதி பெற்றார். மற்றொரு காலிறுதி போட்டியில் ரஷ்ய வீரரிடம் இந்தியாவின் சனம் சிங் தோல்வி அடைந்தார்.

Leave a Reply