தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை நாளை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி   வங்கி ஊழியர்களுக்கு நாளை முதல் 15ம் தேதி முடிய 3 நாள் தொடர் விடுமுறை ஆகும். வங்கிகளுக்கு இன்று தான் பொங்கலுக்கு முந்தைய கடைசி வேலை தினம் ஆகும்.

எனவே, ஏடிஎம்களில் பணம் நிரப்பும் பணி நாளை முதல் மூன்று தினங்களுக்கு நடைபெறாது. இதன் காரணமாக ஏடிஎம்களில் வாடிக்கையாளர் சேவை பாதிக்கப்படும் நிலை உள்ளது.

இது குறித்து வங்கி வட்டாரங்களில் விசாரித்த போது,‘’ஏடிஎம் மையங்களில் திங்களன்று பணம் வைக்கப்படும். மாதத்தின் மத்திய நாட்களாக இருப்பதால் பணம் பெறுவதில் பெரிய அளவில் பாதிப்பு இருக்க வாய்ப்பு இல்லை’ என்றனர்.

Leave a Reply