தற்போது  வங்கி கணக்கு வைத்திருப்பவர்கள் மட்டுமே ஏ.டி.எம் மூலம் பணத்தை எடுக்க முடியும். இனிமேல் வங்கிக்கணக்கு இல்லாதவர்களும், மொபைல் மூலம் பணத்தை பெறும் புதிய வசதி செய்து தரப்படும் என்றும் ரிசர்வ் வங்கியின் கவர்னர் ரகுராம் ராஜன் கூறியுள்ளார்.

ஒருவரது வங்கிக்கணக்கில் இருந்து வங்கிக்கணக்கு இல்லாத ஒருவருக்கு பணம் அனுப்ப வங்கியிடம் எஸ்.எம்.எஸ் மூலம் தகவல் தெரிவித்தால், பணம் பெறுபவர்களுக்கு ரகசிய பாஸ்வேர்டுடன் கூடிய எஸ்.எம்.எஸ் அனுப்பப்படும், அந்த பாஸ்வேர்டு எண்களை வைத்து அவர் ஏ.டி.எம்மில் பணம் எடுத்துக்கொள்ளலாம். இந்த திட்டத்தால் வங்கிக்கணக்கு இல்லாதவர்களும் ஏ.டி.எம் சேவையை பயன்படுத்த முடியும். இதுகுறித்து புதிய தொழில்நுட்பம் அமைப்பது குறித்து வங்கிகளும், செல்போன் நிறுவனங்களும், ஆலோசனை செய்து வருகின்றன,

இன்னும் சில மாதங்களில் இந்த வசதி நடைமுறைக்கு வந்துவிடும் என்றும், இந்த வசதியை மிகுந்த பாதுகாப்புடன் வழங்க ரிசர்வ் வங்கி முடிவு செய்துள்ளது என்றும் ரகுராம் ராஜன் கூறியுள்ளார்.

Leave a Reply