கொரோனா தடுப்பு நிதி: அட்லி கொடுத்து தொகை எவ்வளவு?

கொரோனா வைரஸ் தடுப்பு நிதியாக பல்வேறு கோலிவுட் பிரபலங்கள் லட்சக்கணக்கில் கோடிக்கணக்கில் நிதி உதவி செய்து வருகின்றனர் என்பதை ஏற்கனவே பார்த்தோம்

சமீபத்தில் தல அஜித் அவர்கள் 1.25 கோடியும், நடிகரும் இயக்குனருமான ராகவா லாரன்ஸ் அவர்கள் 3 கோடி நிதியுதவி வழங்கிய செய்திகளைப் பார்த்தோம்

இந்த நிலையில் இயக்குனர் அட்லி, கொரோனா வைரஸ் நிவாரண நிதியாக ரூபாய் 10 லட்சம் கொடுத்துள்ளார். இந்த 10 லட்சத்தில், 5 லட்சம் இயக்குனர்கள் சங்கத்திற்கும் ரூபாய் 5 லட்சம் பெப்சி யூனியன் அமைப்பிற்கும் அவர் கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

ரூபாய் 10 லட்சம் நிதி உதவி செய்து அட்லீக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது

Leave a Reply