shadow

முதல் இடத்தை நோக்கி செல்லும் அஸ்வின் – வில்லியம்சன்

10கான்பூரில் நடைபெற்ற இந்தியா – நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்டில் இந்தியா 197 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் தமிழக வீரர் அஸ்வின் முதல் இன்னிங்சில் 4 விக்கெட்டுக்களும், 2-வது இன்னிங்சில் 6 விக்கெட்டுக்களும் வீழ்த்தி டெஸ்ட் தரவரிசையில் 2-வது இடத்தில் இருந்த ஆண்டர்சனை 3-வது இடத்திற்குப் பின்னுக்குத் தள்ளியுள்ளார். அஸ்வின் 871 புள்ளிகளுடன் 2-வது இடத்திலும், ஜேம்ஸ் ஆண்டர்சன் 870 புள்ளிகளுடன் 3-வது இடத்திலும் உள்ளார்.

மேலும் தென்ஆப்பிரிக்க வீரர் டேல் ஸ்டெயின் 878 புள்ளிகளுடன் முதல் இடத்தில் உள்ளார். இவருக்கும் அஸ்வினுக்கு இடையில் 7 புள்ளிகள் மட்டுமே வித்தியாசம் உள்ள நிலையில் நியூசிலாந்திற்கு எதிரான மீதமுள்ள இரண்டு டெஸ்டிலும் அஸ்வின் சிறப்பாக பந்து வீசினால் முதல் இடத்தை பிடிக்க வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது.

அதேபோல், நியூசிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் முதல் இன்னிங்சில் 75 ரன்னும், 2-வது இன்னிங்சில் 25 ரன்னும் எடுத்ததால் ஜோ ரூட்டை 3-வது இடத்திற்கு தள்ளிவிட்டு 2-வது இடத்திற்கு முன்னேறியுள்ளார். ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் 906 புள்ளிகளுடன் முதல் இடத்தைப் பிடித்துள்ளார். இவருக்கும் வில்லியம்சனுக்கும் இடையே 27 புள்ளிகள்தான் வித்தியாசம் உள்ளது. கொல்கத்தா மற்றும் கடைசி டெஸ்டில் வில்லியம்சன் சிறப்பான ஆடினால் நம்பர் ஒன் இடத்தை பிடிக்க வாய்ப்புள்ளது.

Leave a Reply