என் கிட்ட கேட்டிருந்தா நானே கொடுத்திருப்பேன். ‘தெறி’ தலைப்பின் உரிமையாளர்

என் கிட்ட கேட்டிருந்தா நானே கொடுத்திருப்பேன். ‘தெறி’ தலைப்பின் உரிமையாளர்

theri1விஜய் நடித்து வரும் ‘தெறி படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் நேற்று வெளிவந்து தெறிக்க வைத்த 24 மணி நேரத்திற்குள் இந்த டைட்டில் என்னுடையது என சதீஷ்குமார் என்ற உதவி இயக்குனர் தலைப்புக்கு சொந்தம் கொண்டாடியுள்ளார்.

தன்னுடைய தலைப்பை அவர் முறைப்படி தயாரிப்பாளர் சங்கத்தில் பதிவு செய்து வைத்திருந்ததாகவும், ஆனால் தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவரே இந்த படத்தின் தயாரிப்பாளர் என்பதால் ரிஜிஸ்டர் புக்கில் இருந்தே தன்னுடைய தலைப்பு இருந்த பக்கம் அகற்றப்பட்டதாகவும் சதீஷ்குமார் தனது முகநூலில் பதிவு செய்துள்ளார்.

இதற்காக தான் பிரச்சனை செய்யப்போவதில்லை என்றும் என்னிடம் நேரிடையாக இந்த தலைப்பை கேட்டிருந்தால் நானே கொடுத்திருப்பேன் என்றும் அவர் மேலும் கூறினார். இவருடைய இந்த பதிவு விஜய்யின் ‘தெறி’ படக்குழுவினர்களை சங்கடத்தில் ஆழ்த்தியுள்ளது.

theri3

Leave a Reply